Tuesday, 26 April 2016

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராவது எப்படி ?


தயாராவது எப்படி ? 

கடினமாக படிக்க வேண்டும் என்பதை விட, சரியாக திட்டமிட்டு படித்தாலே வெற்றி பெறலாம். மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் "சி-சாட்' என்ற தாள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி.,யும் இந்த தாளை சேர்த்திருக்கிறது. பல ஆண்டுகளாக தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்கள், புதிதாக இப்பகுதியை படிக்க வேண்டும். முதன்முதலாக தேர்வு எழுதுவோர், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள தமிழ், அறிவியல் மற்றும் சமூகவியல் புத்தகங்களை முழுமையாக படிக்க வேண்டும். பொருளாதாரம் குறித்த கேள்விகளுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொருளாதார பாடங்களே போதும்.

தேர்வுகளில் தத்துவஇயல், மனத்திறன் தொடர்பான கணிதக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இப்பகுதிக்கு ஆழமாக படிக்க வேண்டியதில்லை. சந்தையில் கிடைக்கும் வழிகாட்டி நூல்களை புரட்டினாலே போதும். நடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்களுக்கு, முக்கியத்துவம் தரப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விடையளிக்க, தினமும் செய்தித்தாள்களைப் படித்து, குறிப்பு எடுக்க வேண்டும். முக்கிய செய்தி, சிறப்பு கட்டுரை, தலையங்கம் ஆகியவற்றை சேகரித்து வைக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு மற்றும் ஐந்தாண்டுத் திட்டங்களில், குறைந்தது 5 கேள்விகள் தவறாமல் இடம் பெறும். முக்கிய அரசியலமைப்பு சட்டத் திருத்தங்கள், பிரிவுகள் ஆகியவை பற்றிய பட்டியலை சொந்தமாக தயார் செய்து வைத்து கொள்ளலாம். அறிவியல் பாடங்களைப் படிக்கும் போது, அதன் நடைமுறை, பயன்பாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் சயின்சில் அடிப்படையாக 2 கேள்விகள் இருக்கும். இதற்கு கம்ப்யூட்டர் குறித்த, இயல்பான அறிவே போதும். மொழிப் பாடம் விருப்பப் பாடமாக தமிழை தேர்வு செய்வதா, ஆங்கிலமா என்ற குழப்பம் காணப்படுகிறது. ஆரம்பம் முதல் ஆங்கிலத்தில் படித்து, புலமை பெற்றவர்கள் ஆங்கிலத்தை தேர்ந்தெடுக்கலாம். மற்றவர்கள் தமிழை தேர்வு செய்தல் நலம்.

பாடவாரியாக அட்டவணை தயார் செய்ய வேண்டும். தேர்வுக்கு முன் குறைந்தபட்சம், 10 மாதிரி தேர்வுகளை எழுத வேண்டும். பழைய வினாத்தாள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்திலேயே கிடைக்கின்றன. "சி-சாட்' வினாக்களை பொறுத்த வரை, சொந்தமாக படிக்க முடியாது என்பதால், பயிற்சி மையத்தில் படிக்கலாம். இந்து அறநிலையத்துறை சார்ந்த பணிகளுக்கான தேர்வுக்கு, சைவமும் வைணவமும், இந்து சமய இணைப்பு விளக்கம் போன்ற நூல்களை தேர்வு ஆணையமே பரித்துரைத்திருக்கிறது. இப்புத்தகங்கள் பெரிய கோயில்களில் கிடைக்கின்றன.

ஒரு தேர்வில் வெற்றி பெற்றுவிட்டால், படிப்பதை நிறுத்தி விடாதீர்கள். பணியில் சேரும் வரை என்ன வேண்டுமானாலும் நிகழலாம். கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு. வெற்றி பெற வாழ்த்துகள்.

==============================================================

டி.என்.பி.எஸ்.சி. குரூப் -1 தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?




தமிழ்வழியில் படித்து தேர்வெழுதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சிப் பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச்சேர்ந்த ஜெ. பார்த்திபன்
அளிக்கும் டிப்ஸ்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் ஒன் தேர்வு சிவில் சர்வீஸ் தேர்வைப்போல் மூன்று கட்டங்களாக நடைபெறும். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு அடுத்ததாக நேர்முகத் தேர்வு. இந்த மூன்றுத் தேர்விலும் தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே பதவியில் அமர முடியும். இதில் ஏதாவது ஒரு தேர்வில் தேர்ச்சிப் பெறமுடியாமல் போனால்கூட, மறுபடியும் முதலில் இருந்து இந்தத் தேர்வை எழுதியாக வேண்டும். முதல்நிலைத் தேர்வில் 200 வினாக்கள் கேட்கப்படும். இந்தத் தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் அளிக்கப்படும். சிவில் சர்வீஸ் தேர்வுக்கும், இந்தத் தேர்வுக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால், இந்தத் தேர்வில் தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் அளிக்கப்படாது.
முதல்நிலைத் தேர்வை எழுதும் மாணவர்கள் காலியிடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 1:20 என்ற விகிதத்தில் மாணவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு குரூப் 1 தேர்வில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 61. முதல்நிலைத் தேர்வை 90 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் 1300 மாணவர்கள் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள். மெயின் தேர்வை பொறுத்தவரை 1: 10 என்ற விகிதத்தில் மாணவர்களை நேர்முகத் தேர்வுக்கு (ஒரு பதவிக்கு 10 பேர் என்ற விகிதம்) தேர்வு செய்வார்கள். மொத்தம் 61 பதவிக்கு 610 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, அதில் சிறப்பாக பதில் அளிக்கும் 61 பேருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் பதவிகள் அளிக்கப்படும்.
முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவுக் கேள்வியும், மொழிப்பாடக் கேள்விகளும் இடம்பெறும். மெயின் தேர்வை பொறுத்தவரை இதில் இரண்டு தாள்கள். பொது அறிவு முதல் தாள் மற்றும் பொது அறிவு இரண்டாம் தாள். இரண்டும் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும். ஒவ்வொறு தாளுக்கும், தேர்வு நேரம் 3 மணி நேரம் ஆகும். முதல்நிலைத் தேர்வு முற்றிலும் அப்ஜெக்ட்டிவ் முறையிலானது. ஆனால், மெயின் தேர்வு ஒவ்வொரு கேள்விக்கும் கட்டுரைவடிவில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். பிளஸ் டூ தேர்வு எந்த முறையில் எழுதுகிறோமோ அந்த முறையில் இந்தக் கேள்வித்தாளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
மெயின் தேர்வில் முதல் தாளில் கேட்கப்படும் கேள்விகள் இந்திய வரலாறு, கரண்ட் அஃபயர்ஸ்(நடப்பு நிகழ்வுகள்), சர்வதேச நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள், புள்ளியியல், தமிழக வரலாறு போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
இரண்டாம் தாளில் இந்திய அரசியல், இந்திய புவியியல், பொருளாதாரம், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொது அறிவியல், தமிழர் பண்பாடு, இலக்கியம், தமிழ்நாடு அரசு நிர்வாகம் போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தப் பிரிவு பாடங்களை மெயின் தேர்வுக்கு மட்டும் என்று படிக்காமல் தொடக்கத்திலிருந்து படித்து வந்தால், நிச்சயமாக முதல்நிலை, மெயின் மற்றும் நேர்முகத் தேர்வில் எளிதில் தேர்ச்சிப் பெற்றுவிடலாம். இந்தத் தேர்வை எதிர்கொள்ள ஆண்டுக் கணக்காய் படிக்க வேண்டிய அவசியம் கிடையாது. 7 மாதம் கடினமாக படித்தால் கண்டிப்பாக இந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுவிடலாம்.
2007ஆம் ஆண்டுக்கு முன்புவரை மெயின் தேர்வு முற்றிலும் மாணவர்களின் விருப்பப் பாடத்திலிருந்தே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. விருப்பப் பாடத்தில் ஒரு மாணவர் சிறந்த அறிவு பெற்றிருந்தால் போதும் இந்தத் தேர்வில் எளிதில் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது நிலைமை அப்படி இல்லை. ஒரு மாணவர் கண்டிப்பாக எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தற்போது இந்தத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள், பொது அறிவு விஷயங்களை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். மெயின் தேர்வில் மொத்தம் 110 கேள்விகள் கேட்கப்படும். இதில் 15 மதிப்பெண்கள் கேள்விகளை 4 கேள்விகள் எழுத வேண்டியதிருக்கும். 5 மதிப்பெண்கள் கேள்விகள் 22, 3 மதிப்பெண் கேள்விகள் 20, 1 மதிப்பெண் கேள்விகள் 40 என்று மொத்தம் 88 கேள்விகளுக்கு மாணவர்கள் விடையளிக்க வேண்டும். மீதியுள்ள கேள்விகள் சாய்ஸ்.
மெயின் தேர்வில் முதல் தாளில் கேட்கப்படும் வரலாறு கேள்விகளுக்கு பதிலளிக்க வெங்கடேஷன் எழுதிய சமகால இந்திய வரலாறு மற்றும் இந்திய விடுதலை போராட்ட வரலாறு நூல்களை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். இந்தப் புத்தகத்தில் உள்ள பல தகவல்கள் மெயின் தேர்வில் பதிலளிக்க எளிதாக இருக்கும். இதுதவிர பிளஸ் டூ வரலாறு புத்தகம், 6ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை உள்ள சமூக அறிவியல் புத்தகத்தை நன்றாக படித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கரண்ட் அஃபயர்ஸ், சர்வதேச நிகழ்வுகள் போன்றவற்றை தெரிந்துகொள்ள, தினமணி, இந்து நாளிதழ்கள், மாதந்தோறும் வரும், க்ரானிக்கல், விசார்ட், நியூ விசால் போன்ற புத்தகங்களை தேர்வு செய்து படித்தால், சர்வதேச நிகழ்வுகள் மற்றும் கரண்ட் அஃபயர்ஸ் போன்ற கேள்விகளுக்கு ஓரளவிற்கு சரியாக விடையளித்திட முடியும்.
தேசிய அளவிலான புதிய திட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்ள, திட்டம் என்ற நூல் மாவட்ட அளவில் உள்ள மைய நூலகத்திற்கு வரும். அந்தப் புத்தகத்தைப் படித்து தெரிந்துகொள்ளலாம். அல்லது யோஜனா என்று ஆங்கில வடிவில் வரும் புத்தகத்தைப் படித்து தெரிந்துகொள்ளலாம். நூலகத்திற்கு செல்ல வாய்ப்பில்லாத மாணவர்கள் இணையதளத்தில் வரும் இதன் பக்கங்களை படித்து தெரிந்துகொள்ளலாம். இரண்டாம் தாளில் இந்திய அரசியல் கேள்விகளுக்கு விடையளிக்க லட்சுமிகாந்த் எழுதிய இந்தியன் பாலிட்டி ஆங்கில வழி புத்தகத்தைப் படிக்கலாம். அல்லது தமிழில் பி.ஆர். ஜெயராஜ் எழுதிய இந்திய அரசியலலைப்பு நூலை வாசிக்கலாம். அதுபோல இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி தெரிந்துகொள்ள பிரத்யோகிதா தர்பான் மாத இதழைப் படிக்கலாம். அல்லது டாக்டர் கலிய மூர்த்தி எழுதிய இந்தியப் பொருளாதாரம் புத்தகத்தைப் படிக்கலாம்.இந்திய புவியியல் பாடத்தைப் படிக்க 6 ஆம் வகுப்பில் இருந்து 10ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள புவியியல் பாடங்களைப் படிக்கலாம். அல்லது டாடா மெக்ராகில் புத்தகத்தில் பொது அறிவுப் பகுதியில் புவியியல் பாடத்தைப் படிக்கலாம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் படிக்க 6ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அறிவியல் புத்தகம் மற்றும், அறிவியல் குறித்த சமீபத்திய செய்திகளை ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தமிழ் நாளிதழ்களை தொடர்ந்து படிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். தமிழக நிர்வாகத்துறைக் கேள்விகளுக்கு விடையளிக்க தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் (tண.ஞ்ணிதி.டிண.ஞிணிட்) உள்ள தகவல்களைத் திரட்டிப் படித்துக்கொள்ளலாம். தமிழ் இலக்கிய வரலாறு பற்றி தெரிந்துகொள்ள மு.வரதராசனார் எழுதிய புத்தகத்தைப் படித்து தெரிந்துகொள்ளலாம்.
மெயின் தேர்வை பொறுத்தவரை நேர மேலாண்மை ரொம்ப முக்கியம். கேட்கப்பட்டிருக்கும் எல்லா கேள்விகளுமே பெரும்பாலும் தெரிந்தவையாகத்தான் இருக்கும். ஆனால், எல்லாக் கேள்விகளையும் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. அதற்கு முறையான பயிற்சியை மாணவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும். எல்லாக் கேள்விகளுமே படிக்கும்போது தெரிந்தவையாகத்தான் இருக்கும். ஆனால், அதை எழுதிப்பார்க்கும்போது சொல்ல வந்த விஷயத்தை சொல்லும் நேரத்திற்குள் சொல்வதற்கு தடுமாற்றம் இருக்கும். அதனால், வீட்டில் மாதிரித்தேர்வுகள் எழுதிப்பாருங்கள். மெயின் தேர்வை பொறுத்தவரை எழுத்துப் பயிற்சி மிக அவசியம். எழுத்துப் பயிற்சி இல்லாததால், பல்வேறு மாணவர்கள் தெரிந்த கேள்விக்குக் கூட விடையளிக்கமுடியாத சூழல் ஏற்பட்டுவிடுகிறது.
அதேபோல மெயின் தேர்வை ஆங்கில வழியில் எழுதினால்தான் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற கருத்து பரவலாக தேர்வெழுதும் மாணவர்களிடைய இருக்கிறது. இது முற்றிலும் தவறு. தமிழ் வழியில் சிறப்பாக தேர்வெழுதினாலும் அதிக மதிப்பெண்களைப் பெறலாம். மொழியினால், மட்டும் மதிப்பெண்கள் கிடைத்துவிடாது. நாம் சொல்லும் விஷயங்கள் எந்தளவிற்கு ஆதாரப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாக இருக்கிறது என்பது மட்டுமே தேர்வில் கவனிக்கப்படுகிறது என்பதை தேர்வு எழுதப்போகும் நபர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் சாதனையாளர் பார்த்திபன்.

பயனுள்ள முகவரி

இலவச புத்தகம்

இலவச புத்தகம்

www.books.tamilcube.com

Wednesday, 9 March 2016

அரசியலமைப்பு - விதி (52-151)

விதிகள்- மத்திய அரசு ( 52 - 151 )..,

52 – நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் ஒருவர் இருத்தல் வேண்டும்

53 – நிர்வாக அதிகாரம்

54 – குடியரசுத் தலைவர் தேர்தல்

55 – தேர்தல் முறை

56 – குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்

57 – மீண்டும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்க தகுதி படைத்தவர்.

58 – தகுதிகள்

59 – சம்பளம் ஆதாயம் தரும் பதவி வகிக்க கூடாது

60 – பதவிப் பிரமாணம்

61 – பதவி நீக்கம்

62 – குடியரசுத் தலைவர் பதவி காலம் முடியும் முன்னரே தேர்தல்
நடத்தப்பட வேண்டும்

63 – நாட்டில் ஒரு குடியரசு துணை தலைவர் இருக்க வேண்டும்

64 – குடியரசுத் துணை தலைவர் பதவி வழி மாநிலங்களவையின் தலைவர்.

65 – துணைகுடியரசுத் தலைவர் குடியரசு தலைவரின் பணிகள் செய்தல்.

66 – குடியரசுத் துணை தலைவரின் தகுதிகள்.

67 - குடியரசுத் துணை தலைவரின் பதவிக்காலம்

68 - குடியரசுத் துணை தலைவரின் பதவிக்காலம் முடியும் முன்பே தேர்தல் நடத்துதல்

69 - குடியரசுத் துணை தலைவரின் பதவிப் பிரமாணம்

71 – குடியரசுத் தலைவர், துணைகுடியரசுத் தலைவரின் தேர்தல் முடிவு பற்றி எழும் சந்தேகம் இறுதி முடிவு – உச்சநீதிமன்றம்

72 – குடியரசு தலைவரின் மண்ணிக்கும் அதிகாரம்

74 – அமைச்சரவை

75 – அமைச்சரவை மக்களவைக்கு கூட்டு பொறுப்பு

76 – இந்திய அரசு தலைமை வழக்குரைஞர்

78 – பிரதம மந்திரியின் கடைமைகள்

79 – நாடாளுமன்றம்

80 – ராஜ்யசபா

81 – மக்களவை

82 – தொகுதி சீரமைப்பு

83 – மக்களவையின் உறுப்பினர்களின் பதவிக்காலம்

84 - மக்களவையின் உறுப்பினர்களின் தகுதிகள்

85 – நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டும் அதிகாரம்
(குடியரசு தலைவர்)

86 – நாடாளுமன்றத்தின் அவைகளின் உரை நிகழ்த்தவும் உரிமை

87 – தேர்தல் நடந்தவுடன் நடக்கும் முதல் கூட்டத்திலும் ஒவ்வொரு
வருடத்தின் முதல் கூட்டத்தின் குடியரசு தலைவர் உரை

88 – இந்திய தலைமை வழக்குரைஞரும் நாடாளுமன்ற கூட்டங்களின் பங்கெடுக்கவும் பேசுவதற்கும் உரிமை

89 – குடியரசு துணை தலைவர் பதவி வழி முறையின்மாநிலங்களவையின் தலைவர்

90 – பதவி விலகல் கடித்ததை தலைவர் குடியரசு தலைவரிடம் தர வேண்டும்

91 – தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில் துணைத்தலைவர் அப்பதவியில் பொறுப்போற்று பணியாற்றுவார்.

92 – தலைவர் துணைதலைவர் பதவி நீக்கம்

93 – சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்

94 – பதவி விலகல் கடிதம்

95 – பதவி காலியாக உள்ளநிலையை நிரப்புதல்

96 – சபாநாயகர் பதவி நீக்கம்

97 – சபாநாயகரின் படித்தொகை

98 – செயலகங்கள்

99 – தற்காலிக சபாநாயகர்

100 – கூட்டம் நடத்த (1/10) உறுப்பினர்கள் தேவை

101 – ஒருவர் நாடாளு மன்றத்தின் ஒரு அவை மற்றும் சட்டமன்ற அவையின் உறுப்பினராக இருந்தால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலியாகி விடும்

102 - உறுப்பினர்களின் தகுதியின்மை / தகுதியிழப்பு ‘
103 – கட்சி தாவல் சட்டத்தின் படி தகுதியின்மை செய்யும் அதிகாரம்

104 – பிறசூழல்களில் தகுதி இழப்பு செய்வது என்பது குடியரசுத் தலைவரிடம் உள்ளது ( தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் )

105 – நாடாளுமன்றத்தின் பேச்சுரிமை

106 – நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் படி

107 – மசோதாக்களின் நிலை

108 – கூட்டு அமர்வு

109 – பண மசோதா

110 – பண மசோதாவின் வரையரை

111 – மசோதா குடியரசு தலைவரின் இசைவினை

112 – ஆண்டு நிதி நிலை அறிக்கை( பட்ஜெட் )

113 – வரிசீர்திருத்தம் நிதி ஆண்டின் திட்டமிடப்பட்ட வருமானம் மற்றும்
செலவினங்களை குறித்த விவரங்களை தருகிறது

114 – பணம் ஒதுக்கீடு மசோதாக்கள்

115 – Supplementary Grant

117 – நிதி மசோதா

118 – இந்திய நாடாளுமன்ற ஈரவை மன்றமுறை

119 – முக்கிய பணி, பாதுகாப்பு, அமைதி நாடாளுமன்றத்தின் பணி

120 – பாராளுமன்றத்தில் பயன்படுத்தும் மொழி

121 – நாட்டின் நிதிநிலைமைக்கு முழுபொறுப்பு நாடாளுமன்றம்

122 – பாராளுமன்ற விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிடாது

123 – குடியரசு தலைவரின் அவசர சட்டம்

124 – உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு

125 – உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் சம்பளம்

126 – தற்காலிக நீதிபதி

127 – கூடுதல் நீதிபதி

128 – ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்

129 – உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் தங்களை அவமதித்த குற்றத்திற்காக எந்த நபரையும் தண்டிக்கலாம்

130 – உச்ச நீதிமன்றத்தை எங்கு வேண்டுமனாலும் மாற்றும் உரிமை
தலைமை நீதிபதிபதிக்க உண்டு.

131 – அசல் முதல் அதிகார வரம்பு

132 – அரசியலமைப்பு குறித்த வழக்கில் மேல் முறையீடு

133 – உரிமையியல் குறித்த வழக்கில் மேல் முறையீடு

134 – குற்றவியல் குறித்த வழக்கில் மேல் முறையீடு

136 – சிறப்பு அனுமதி குறித்த வழக்கில் மேல் முறையீடு

137 – தனது தீர்ப்புகளை மறுசீராய்வு செய்யும் அதிகாரம்

138 – அதிகார வரம்பு நீட்டிப்பு

139 – வழக்கினை மாற்றும் அதிகாரம்

141 – உச்சநீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களின் அனைத்தையும்
கட்டுப்படுத்தும்

143 – ஆலோசனை கூறும் அதிகார வரம்பு




Wednesday, 2 March 2016

முக்கிய குழுக்கள்

முக்கிய குழுக்கள்

#.ஏ. எம். குஸ்ரோ = இந்திய தேசிய வங்கி பரிந்துரை

‪#‎எல்‬.சி. குப்தா = பங்குச்சந்தை செயல்பாட்டை கவனிக்க

#.ராஜா செல்லையா = வரி சீரமைப்பு

‪#‎ரங்கராஜன்‬ = பொது நிறுவனங்களின் முதலீட்டிற்கான வரையறை

#.மல்கோத்ரா = காப்பீட்டுதுறை தனியார்மாயம்

#.அபீத் ஹுசைன் = குடிசைத்தொழில்கள்

#.வி.எம். தண்டேகர்&நீலகண்ட ரத் = வறுமை

#‎லக்கடவாலா‬,தந்த்வாலா = வறுமை

#.பகவதி குழு = வறுமை&வேலைவாய்ப்பு

‪#‎கே‬.என். ராஜ் குழு = விவசாய வருமான வரி

#.காகா கலேல்கர் கமிட்டி = முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.

#.மண்டல் கமிசன் = இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்

#.B.G.கெர் ஆணையம் = அலுவலக மொழிகள்

#.நரசிம்மன் = வங்கிநிர்வாகம்&அமைப்பு சீர்த்திருத்தம்

#.ராஜா செல்லையா = வரிச் சீர்திருத்தம்

#.P.V.ராஜ மன்னார் = மத்திய மாநில உறவுகள்

சர்க்காரியா = மத்திய மாநில உறவுகள்.

# எம்.எம்.பூஞ்சி ஆணையம்= மத்திய மாநில உறவுகள்.

‪#‎தினேஷ்‬ கோஸ்வாமி = தேர்தல் சீர்திருத்தம்

‪#‎M‬.N.வோரா = அரசியல் கிரிமினல்கள்

‪#‎J‬.M.லிண்டோ = மாணவப்பருவ அரசியல.

#.B.M.கிர்பால் = தேசிய வன ஆணையம்

#.மொராய்ஜி தேசாய் = முதல் நிர்வாகச் சீர்திருத்தம்

‪#‎வீரப்ப‬ மொய்லி = இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம்

#.பல்வந்த்ராய் மேத்தா = மூன்றடுக்கு பஞ்சாயத்து

‪#‎அசோக்‬ மேத்தா = இரண்டடுக்கு பஞ்சாயத்து

#.அனுமந்தராவ், G.M.D.ராவ், L.M.சிங்வி = பஞ்சாயத்து

#.கோத்தாரி குழு = கல்வி

யஷ்வால் குழு = உயர்கல்வி

#.பானு பிரதாப் சிங் = விவசாயம்

‪#‎மாதவ்‬ காட்கில்,கஸ்தூரி ரங்கன் = மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய

#.சோலி சொராப்ஜி = காவல்துறை சீர்திருத்தம்

‪#‎பசல்‬ அலி = மாநில மறுசீரமைப்பு ஆணையம்

‪#‎ராம்நந்தன்‬ பிரசாத் = பாலேடு வகுப்பினர்

‪#‎S‬.பத்மநாபன் கமிட்டி = வணிக வங்கிகளின்நிலை

#.ரகுராம் ராஜன் = நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம்

#.G.T.நானாவதி = 1984 -சீக்கியக் கலவரம்

#.நானாவதி மேத்தா கமிஷன் = கோத்ரா ரயில்

#.பட்லர் கமிட்டி = இந்திய மாகாணம் குறையாட்சிக்கு உள்ள தொடர்பு

‪#‎முடிமன்‬ கமிட்டி = இரட்டை ஆட்சி






அரசியலமைப்பு சார்ந்த ஷரத்துக்கள்

அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள்: (constitutional bodies)
அமைப்பு தொடர்புடைய ஷரத்து Art

- தேர்தல் ஆணையம் Art.324

# மத்திய தேர்வாணையம் Art.315-323

# மாநில தேர்வாணையம் Art.315-323

#. நிதிக்குழு Art.280

#. தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் Art.338

#. பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் Art.338-A

‪#‎மொழிச்‬ சிறுபான்மையினருக்கான சிறப்பு அலுவலர் Art.350-B

# தலைமை தணிக்கை அதிகாரி (CAG) Art.148

# அட்டர்னி ஜெனரல் Art.76

#. அட்வகேட் ஜெனரல் Art.165

அரசியலமைப்பு சாராத அமைப்புகள் ( Non- Constitutional Bodies)அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டுகள்

‪#‎திட்டக்குழு‬ March 1950

‪#‎தேசிய‬ வளர்ச்சிக் குழு August 1952

#. தேசிய மனித உரிமை ஆணையம் 1993

‪#‎மாநில‬ மனித உரிமை ஆணையம் 1993

# மத்திய கண்காணிப்பு ஆணையம் 1964

‪#‎மத்திய‬ தகவல் ஆணையம் 2005

#மாநில தகவல் ஆணையம் 2005




Tuesday, 1 March 2016

ராணுவ கூட்டுப்பயிற்சிகள்


ராணுவ கூட்டுப்பயிற்சிகள்
======================================
.
01) இந்தியா & பிரிட்டன் (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன?

AJEYA WARRIOR
02) இந்தியா & பிரிட்டன் (விமானப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன?   
  INDRA DHANUSH
03) இந்தியா & பிரிட்டன் (கடற்ப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன?
                                           KONKAN 
04) 14வது இந்தியா & பிரான்ஸ் (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன?   
                                   VARUNA


05) இந்தியா & சிங்கப்பூர் (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன?             SIMBEX

06) இந்தியா, ஜப்பான் & அமெரிக்கா (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன?
                                      MALABAR
 

07) இந்தியா & அமெரிக்கா (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? YUDH ABHYAS
 

08) இந்தியா & சீனா (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?                 HAND IN HAND

09) இந்தியா & ரஷ்யா (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
                                                      INDRA NAVY
   
10) இந்தியா & ரஷ்யா ( விமானப்படை) 2014 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?                                                 AVIVA INDRA

11) இந்தியா & நேபாள் (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
                                                      SURYA KIRAN - 8
12) 3வது இந்தியா & இலங்கை (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?
                                               MITHRA SAKTHI    
                                                                               
13) இந்தியா & இலங்கை (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? 
                                                             SLINEX
14) 10வது இந்தியா & மங்கோலியா (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? 
                                            NOMADIC ELEPHANT
  
15) இந்தியா & இந்தோனேசியா (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?                                                                                                                                                                                                                  GARUDA SHAKTHI - 3

16) இந்தியா & இந்தோனேசியா (கடற்படை) ஒருங்கிணைந்த ரோந்து பயிற்சியின் பெயர் என்ன ?
                                        CORPAT (Co ordinated Patrol ) 

  17) இந்தியா & ஓமன் (கடற்படை) 2016 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? 
                                    NASEEM - AL - BAHR
 

18) 6வது இந்தியா & மாலத்தீவு (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?                                              EKUVERIN
19) இந்தியா & கிர்கிஸ்தான் (தரைப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர்   என்ன ? 
                           KHANJAR
 
20) இந்தியா, ஜப்பான் & சீனா ( கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர்    என்ன ?                    SHADE

21) பாகிஸ்தான் & சீனா 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? 
                                       SHAHEEN - 2 (கழுகு)
 

22) அமெரிக்கா & தென் கொரியா 2015 கூட்டு பயிற்சியின் பெயர்                     என்ன ?                                 ABLE RESPONSE ( Anti biochemical exercise)
  23) அமெரிக்கா & மலேசியா (கடற்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர்   என்ன ?
       CARAT - 21 ( Cooperation Afloat Readiness and Training )           
                                                                                                                                                                         
  24) அமெரிக்கா &10 NATO உறுப்பு நாடுகள் (விமானப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?                                          
                                SWIFT RESPONSE  

25) அமெரிக்கா மற்றும் 30க்கும் மேற்பட்ட நேசநாட்டு படைகளின் சுமார் 30,000வீரர்கள் கலந்துகொண்ட மிகப்பெரிய போர் பயிற்சி - 2015ன் பெயர் என்ன ?  TRIDENT JUNCTURE 

  26) ரஷ்யா & சீனா (கடற்படை & விமானப்படை) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?   
                           JOINT SEA 1 & 2  

27) அமெரிக்கா, ஆஸ்திரேலியா & ஜப்பான் 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? 
  TALISMAN SABRE  

28) இந்தியா & ஆஸ்திரேலியா (கப்பற்படை ) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?                                     
                             AUSINDEX   

29) இந்தியா & பங்களாதேஷ் ( தரைப்படை ) 2015 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ?                                   SAMPRITI   

30) இந்தியா & ஜப்பான் (கடலோர காவல் படைகள்) 2016 கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? 
                                                    Sahyog - Kaijin   

31) இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா, அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், தென்கொரியா உள்ளிட்ட 35 நாடுகள் இணைந்து மேற்கொண்ட பேரிடர் கால மீட்பு ஒத்திகை - 2016ன் பெயர் என்ன ?                                                         
                                     COBRA GOLD

32) சவூதி அரேபியா & 20க்கும் மேற்பட்ட நாடுகள் மேற்கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு ஒத்திகை - 2016ன் பெயர் என்ன ?
North Thunder