Wednesday, 23 December 2015

இந்திய அரசியலமைப்பு


இந்திய அரசியலமைப்பு

  • அரசியலமைப்புக்கு முன் தோற்றம். (1773 -1858)
  • விக்டோரியா பிரகடனம் முதல். (1858 - 1935)
  • அரசியலமைப் உருவாக்கம். (1935 - 1950)
  • அரசியலமைப்பு (1950 முதல் தற்போது வரை)


அரசியலமைப்பு வரலாறு

ஒழுங்குமுறைச் சட்டம் - 1773 

·          பிரிட்டன் பாராளுமன்றத்தின் கீழ் கிழக்கிந்திய கம்பெனி இயங்கும்.

·          வங்காள கவர்னர் கல்கத்தா, பம்பாய் மற்றும் மெட்ராஸ் மாகணத்தின் கவர்னராகவும் நியமிக்கப்பட்டார்.

·          முதல் கவர்னர் ஜெனரல் வாரன்ஹேஸ்டிங்.

·          1774 - கல்கத்தா உச்சநீதிமன்றம் உருவாக்கப்ட்டது. இதில் 1+4 உறுப்பினர்கள் இருந்தனர். (கவர்னர்+4 உறுப்பினர்கள்)

·          கவர்னர் ஜெனரலுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.



பிட்ஸ் இந்தியா சட்டம் 1784

·          கம்பெனியின் நிர்வாகத்தை ஒழுங்கு படுத்துதல்.

·          அதிகாரத்தை குறைத்தல்.

·          பிரிட்டீஸ் அரசின் அமைச்சர் 1 + 6 உறுப்பினர் கமிட்டியிடம் நிர்வாக பொறுப்புகள் அனைத்தும்  ஒப்படைக்கப்படும்.

·          மாகாணங்கள் மத்திய அரசின் ஒப்புதலுடன் செயல்பட்டன.

·          வாணிபம் தொடர்பாக ஒப்புதல் கம்பெனியின் போர்ட் ஆப் டிரெக்டர்ஸின் அதிகாரத்திற்குள் வந்தது.

·          லயட் பிட் இங்கிலாந்து பிரதமர். அவர் கொண்டு வந்த சட்டம்.

·          1786 பிட் இந்திய திருத்த சட்டம்.

பட்டயச் சட்டம் 1793

·          நிர்வாகக் குழு சம்பளம் இந்திய வருவாய்லிருந்து வழங்கப்பட்டது,

·          சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம்.

·          மேலும் 20 ஆண்டுகளுக்கு மாற்றி அமைத்தது.

பட்டயச் சட்டம் 1813

·          மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா கவுன்சில்களின் அதிகாரம் விரிவுபடுத்துதல்.

·          உள்ளுர் தன்னாட்சி அமைப்புகள் வரி வசூலிக்க உரிமை.

·          மேலும் 20 ஆண்டுகளுக்கு மாற்றி அமைத்தது.

·          ஒரு லட்சம் பேருக்கு ஆங்கில வழிக் கல்வி அறிவிப்பு ஆனால் தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்கவில்லை. ஃ

·          ஃ 1830- கிறிஸ்துவம் சமயம் பரப்ப அனுமதிக்கப்பட்டனர்.

பட்டயச் சட்டம் 1833


·          கிழக்கிந்திய கம்பெனியின் வணிக உரிமை ரத்தானது.

·          கிழக்கிந்திய கம்பெனி Government of India என்று அழைக்கப்பட்டது.

·          நிர்வாகக் குழு ‘இந்தியக்குழு‘ என்று அழைக்கப் பட்டது.

·          வங்காள கவர்னர்  ஜெனரல் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆனார்.  முதல் இந்திய கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபு (சட்டப்படி)

·          சட்ட உறுப்பினர்கள் பதவி உருவாக்கப்பட்டது.

·          முதல் சட்ட உறுப்பினர் லார்ட் மெக்காலே.

·          கலெக்டர்களை தேர்ந்தேடுக்க போட்டி தேர்வுகள் முதல் முறையாக நடத்தப்பட்டது.


பட்டயச் சட்டம் 1853


·          நிர்வாக அதிகாரம் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது

·          ஐ.ஏ.எஸ், அதிகாரிகள் ஒரு வருடம் கண்டிப்பாக பயிற்சி பெற வேண்டும்.
.
·          அனைத்து கிழக்கிந்திய கம்பெனி ஆட்களும் போட்டி தேர்வு முறையில்
 தேர்ந்தேடுத்தனர்.



                 பொதுவானவை முக்கியமானவை

·         17 மார்ச் 1835  - ஆங்கில பயிற்சி மற்றும் ஆட்சிமொழியாக          மாற்ற மெக்காலே பரிந்துரை.




·         2 ஆகஸ்ட் 1858 இந்திய அரசு சட்டம்.
1.       கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்பட்டது.
2.       வைசிராய் அரச பிரதிநிதி
3.       அயலுறவு செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது.

  • சார்லஸ் வுட்ஸ் முதல் அயலுறவு செயலாளர்.

  • 1854 - வுட்ஸ் அறிக்கை இந்தியாவின்  அறிவுப்பெட்டகம்.

  • 1857 கல்கத்தா, பம்பாய், சென்னை பல்கலைக்கழகங்கள், லண்டன் பல்கலைகழகத்தைப் போன்று உருவாக்கப்பட்டது.

  • 1858 இந்தியா, பிரிட்டீஸ் அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்கு வந்தது.
  •  
     
     
  • 1858 இந்திய அரசாங்கச் சட்டம்
  •  
     
  • ·          1858 இந்தியா, பிரிட்டீஸ் அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்கு வந்தது.

    ·          இந்தியாவின் கவர்னர் வைஸ்ராய்ராக அறிவிக்கப்பட்டார். முதல் வைஸ்ராய் கானிங் பிரபு. (கடைசி கவர்னர் ஜெனரல்)

    ·          மாநிலங்களின் செயலர் என்ற கேபினட் அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது. இவர் பிரிட்டிஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். (15 பேர் குழு (8+7))

    ·          ஃ நவம்பர் 1 1858 விக்டோரியா அறிக்கை.

    ·          அலகாபாத் தர்பாரில் இந்த மகாசாசனம் அறிவிக்கப்பட்டது.

    ·          மாகாணங்களில் கல்வித்துறை ஏற்படுத்தப்பட்டது.



    1861 இந்திய கவுன்சில் சட்டம்

    ·          நிர்வாகக்குழு இனி மத்திய சட்ட மன்றமாக என்று அழைக்கப்படும்.

    ·          1862 கல்கத்தா, பம்பாய், மெட்ராஸ் உயர்நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டது.

    ·          வங்காளம், பம்பாய், மெட்ராஸ் - தனித் தனி சட்டமன்றங்கள் உருவாக்கப்பட்டன.


    1892 இந்திய கவுன்சில் சட்டம்

    ·         இந்தியர்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கேள்வி கேட்க முடியாது.

    ·         நிர்வாகக் குழு எண்ணிக்கை அதிகரிப்பு. 10 16.

    ·         மிதவாதிகள், இந்திய தேசிய காங்கிரசுக்கு கிடைத்த  முதல் வெற்றி.




    1909 மிண்டோ மார்லி சீர்திருத்தம்

    ·         மிண்டோ அரசுப்பிரதிநிதி (வைஸ்ராய்)
    ·         மார்லி அரசுச் செயலர்.

    ·         தேர்தல் அறிமுகம் (மறைகத்தேர்தல்)

    ·         ஓட்டு அளிக்கும் உரிமை கற்றவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டது.

    ·         முஸ்லிக்ளுக்கு மட்டும் இடஒதுக்கீடு.

    ·         நிர்வாகக் குழுவில் இந்தியர் ஒருவர் இடம் பெற அனுமதிக்கப்பட்டனர். முதல் இந்தியர் எஸ்.பி. சின்ஹா. (சத்யேந்திர பால் சின்ஹா)

    ·         16-லிருந்து 60 ஆக நிர்வாகக்குழுவில் உறுப்பினர்கள் சேர்கப்பட்டனர்.

    ·         இடஒதுக்கிட்டின் தந்தை மிண்டோ.



    1919 மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தம்

    ·         மாண்டேகு       செயலர் ( லிபரல் கட்சி )
    ·         செம்ஸ்போர்ட் -   வைசிராய்
    ·         1921 -ம் ஆண்டு சட்டம் அமலுக்கு வந்தது.

    ·         மாகணங்களில் இரட்டை ஆட்சிமுறை அறிமுகம்.

    ·         அனைத்து பிரிவினருக்கும் இடஒதுக்கீடு. ( சிக்கியர், பாரசீகர், கிறிஸ்துவம், ஆங்கிலோ இந்தியன்)

    ·         அனைத்து பிரிவினருக்கும் வாக்குரிமை. நேரடி தேர்தல் முறை அறிமுகம்.

    ·         இந்தியாவிற்கான உயர் ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டது.

    ·         1926 ல் தேர்வாணையம் ஏற்படுத்தப்பட்டது.


    1919 சைமன் கமிசன்

    • 1919 சட்டத்தினை ஆராய அமைக்கப்பட்டது. ராயல் குழு அல்லது சைமன் கமிஷன்.
    • 7 உறுப்பினர்கள் ஒருவரும் இந்தியர் இல்லை.
    • 1927 மெட்ராஸ் காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் புறகணிக்க முடிவு.
    • 2 முறை இந்தியா வருகை (1928 பிப்-மார்ச்/ 1928 அக்-1929 ஏப்)
    • எதிர்ப்பு போராட்டத்தில் ‘பஞ்சாப் சிங்கம்‘ லாலா லஜபதிராய் இறப்பு
    • 1930, மே 27 அறிக்கை வெளியிட்டது.

    1928 நேரு அறிக்கை

    ·          7 அத்தியாயம், 2 அட்டவணை, 3 பின்னிணைப்பு, 24 பக்கம்.

    ·          7-வது அத்தியாயத்தில் ‘அரசியல் சட்டவரைவு‘ குறித்து விளக்கப்பட்டு இருந்தது.


    ·          முஸ்லிம் லீக் நிராகரித்தது, 14 அம்ச ஜின்னா அறிக்கையை சமர்பித்தது.


    1935 இந்திய அரசுச் சட்டம்


    ·         மாநிலங்களில் சுயயாட்சி அறிமுகம்.

    ·         மத்தியில் இரட்டை ஆட்சி.

    ·         மத்திய பட்டியல், மாநில பட்டியல் அறிகம்.

    ·         கூட்டாட்சி நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. (01-04-1937)

    ·         மத்திய வங்கி ஏற்படுத்தப்பட்டது. 1935

    ·         வகுப்புவாத பிரதிநிதிதுவம் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அளிக்க்ப்பட்டது.

    ·         1858ம் சட்டப்படி நிறுவப்பட்ட இந்திய கவுன்சில் சட்டம் இது கலைத்தது.

    ·         ( 20-வது நிதி கமிசன் ஏ.பி.ஷா )



    அரசியல் அமைப்பு உருவாக்கம்

    ·          அரசியலமைப்பு நிர்ணயச் சபை உருவாக்கம்.

    ·          மே 16, 1946. அமைச்சரவை து,,துக் குழு. சர் பெத்விக் லாரன்ஸ் தலைமையில் அமைக்கப்பட்டது.


    ·          உறுப்பினர்கள் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ், ஏ.வி.அலெக்ஸான்டர்.

    ·          6-12- 1946 அரசியல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

    ·          9- 12. -1946 அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம். தற்காலிகத் தலைவர் சச்சிதானந்த சின்ஹா.( இறந்து விட்டாடர் )

    ·          11 12 1946 டாக். ராஜேந்திர பிரசாத் நிரந்தர தலைவர்.

    ·          துணைத் தலைவர் எச்.சி. முகர்ஜி. ஆலோசகர் சர்.பி.என்.ராவ்

    ·          13 12 1946 குறிக்கோள், தீர்மானம் நேரு அவர்களால் நிறைவேற்றப்பட்டது.

    ·          22 01 1947, குறிக்கோள், தீர்மானம் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அது முகப்புரை எனப்பட்டது. அமெரிக்காவிலிருந்து பெறப்பட்டது.

    ·          29 08 1947 வரைவுக் குழு ஏற்படுத்தப்பட்டது. (1+6)

    ·          21 -02 1948  ‘இந்தியாவுக்கான வரைவு அரசியல் சட்டத்தை‘  நிர்ணய சபையிடம் வரைவுக்குழு சமர்பித்தது. இதற்கு 141 வேலை நாட்கள் ஆனது.

    ·          26 11  - 1949 அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    ·          26 11 1950 நடைமுறைக்கு வந்தது.

    ·          ( 26 நவம்பர் தேசிய பால் தினம் )

    ·          மொத்த நாட்கள் 2 ஆணடுகள் 11 மாதங்கள் 18 நாட்கள்.

    ·          செலவு 64 லட்சம்.

    ·          பொதுமக்கள் பார்வைக்கு 8 மாதங்கள் வைக்கப்பட்டது.

    ·          அரசியல் நிர்ணய சபை மொத்த கூட்டம் 11. சுதந்திரத்திற்கு முன் 4 முறை, சுதந்திரத்திற்கு பின் 6 முறையும் கூடியது. 5- வது கூட்டத்தின் போது சுதந்திரம் பெற்றது.




    இந்தியதேசியக் கொடி

    Ø       22 7- 1947,   மு,,வர்ணக்கொடி இந்திய தேசிய காங்கிரசால்    அங்கிகரிக்கப்பட்டது.

    Ø       1931 ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிங்களி வெங்கைய்யா வடிவமைத்தார்.

    Ø       டிசம்பர் 29, 1931, கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் முதல் முதலாக கொடி பறக்கவிடப்பட்டது. (மாநாட்டின் தலைவர் ‘சர்தார் வல்லபாய் பட்டேல்‘) அடிப்படை உரிமைகள் சட்டம் வேண்டுமென தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    Ø       வெள்ளை நிறம் காந்தி பரிந்துரை செய்தது.

    Ø       3 வண்ணங்களைப் பற்றி டாக். ராதாகிருஷ்ணன் விலக்கம் அளித்தார்.



    இந்தியதேசிய கீதம்


    Ø       24 1 -1950, ஜன கன மன தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    Ø       1911 ஜன கன மன ... பாடல் தாகூர் அவர்கள் 5-ம் ஜார்ஜ் மன்னன் வரவேற்க பாடப்பட்ட பாடல் இது.

    Ø       டிசம்பர் 27, 1911. கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் முதல் முதலாக பாடப்பட்டது. ( 2-வது நாளில் பாடப்பட்டது.) (தலைவர் பிஷன் நாரயணன் தர்)

    Ø       1912 ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு ‘மார்னிங் சாங் என்ற பெயரில் ‘தத்துவ போதனி‘ என்ற இதழில் வெளியானது.

    Ø       1882 - வந்தே மாதரம்தேசிய பாடல். பங்கிம் சந்திர சட்டர்ஜி. ஆனந்த் மடம் என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்டது.

    Ø       1896 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலாக பாடப்பட்டது. இசையமைப்பாளர் தாகூர்.( தலைவர்- எம். ரகமத்துல்லா சயானி)

    Ø       1918 வந்தே மாதரம் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர்  அரவிந்த் கோஷ்



    Ø       மே 1949-ல் காமன்வெல்த் நாட்டில் இந்தியா இணைந்தது.
    Ø       மும்பை விக்டோரியா சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம் முதல் ஹரிட்டேஜ் ரயில் நிலையம்




    Ø       24 1 -1950 ராஜேந்திரபிரசாத் இந்திய குடியரத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    Ø       24 1 1950, கடைசியாக அரசியல் நிர்ணயசபை கூடியது.    (11 கூட்டங்களில் இது கிடையாது)  

    Ø       25 1 1950, தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது.

    Ø       ஜனவரி 25, தேசிய வாக்காளர் தினம், 2011 முதல்

    Ø       ஜனவரி 24, தேசிய பெண் குழந்தைகள் தினம்.

    Ø       26 -1 -1950, சாரநாத் நான்கு முக சிங்கம்  தேசிய சின்னமாக அங்கீகரிப்பு. (சாரநாத் உ.பி)

    Ø       28 1 1950, கூட்டாட்சி நீதிமன்றம் உச்சநீதிமன்றமாக மாற்றப்பட்டது.

    Ø       15 3 1950, திட்டக்குழு அமைக்கப்பட்டது. கே.சி. நிபோச்சி குழு பரிந்துரை (1946)

    Ø       13 8 2014, திட்டக்குழு கலைக்கப்பட்டது. நிதி ஆயுக் உருவாக்கப்பட்டது.










    இந்திய அரசியலமைப்பு




    Ø       அரசியலமைப்பு உருவாக்கிய போது 8 அட்டவணை, 22 பாகம், 395 சட்ட விதிகள் இருந்தன.
    Ø       தற்போது 12 அட்டவணை, 25 பாகம், 496க்கு மேல் விதிகள்.




    முகப்புரை


    Ø        இறையாண்மை, சமதர்மம், மதச்சார்ப்பற்ற, மக்களாட்சி, குடியரசு, என்ற வார்த்தைகள் இடம் பெற்றுருக்கும்.

    Ø       1976 42 சட்ட திருத்தம் மு‘லம் சமதர்மம், மதச்சார்பற்ற என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது. (இந்திரா காந்தி)

    Ø       3 வகை நீதி === சமு‘க நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி (ரஷ்ய புரட்சியிலிருந்து எடுக்கப்பட்டது 1917 )

    Ø       5 வகை சுதந்திரம் === எண்ணம், எழுத்து, வெளிப்பாடு, நம்பிக்கை, வழிபாடு (முகப்புரை)

    Ø       சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், (பிரெஞ்ச் புரட்சி -1789 )

    Ø       சமத்துவம் 2 வகை ==  தரத்திலும், வாய்ப்பிலும் சம உரிமை

    Ø       1976 42 திருத்தம், முகப்புரை ஒருமுறை மட்டுமே மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    Ø       1976 42வது திருத்தம் மு/லம் 3 வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது. சமத்துவம், மதச்சார்பற்ற, ஒருமைப்பாடு.





    முகப்புரை சார்ந்த வழக்குகள்


    Ø        1960 பெருபாரி யூனியன் வழக்கு முகப்புரை அங்கம் அல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

    Ø       1967 கோலக்நாத் வழக்கு முகப்புரை ஒரு அங்கம்.


    Ø       1973 கேசவானந்த பாரதி எதிர் கேரள வழக்கு, முப்புரையை திருத்திக் கொள்லாம் ஆனால், அடிப்படை கட்டமைப்பு மாறாமல் மாற்றிக் கொள்ளலாம்.

    Ø       1970 மினர்வா மில்ஸ் வழக்கு. முப்புரை ஒரு அங்கம். அடிப்படை உரிமை, அரசியல் நெறிகாட்டு வழிமுறை, சமதர்மத்தை எடுத்துக் கூறுகிறது.

    Ø       1994 எஸ்.ஆர்.பொம்மை எதிர் இந்தியன் வழக்கு. ஒரு அங்கம்.

    Ø       1995 எல்.ஐ.சி வழக்கு, முகப்புரை ஒரு அங்கம்.












    அட்டவணை 12

    அட்டவணை 1

    Ø     இந்தியாவின் எல்லைகள் மற்றும் தலைநகரம்

    Ø     மாநிலத்தின் எல்லை மற்றும் தலைநகர்.

    Ø     மத்திய ஆட்சிப் பகுதியின் எல்லைகள்.


    அட்டவணை 2


    Ø     பதவிகள் மற்றும் சம்பளம்.
    -          குடியரசுத் தலைவர்.
    -         பிரதமர் மற்றும் அமைச்சர்.
    -         நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராஜசபா உறுப்பினர்கள், லேக்சபா மற்றும் ராஜசபா தலைவர்கள்.
    -         சி.ஏ.ஜி.
    -         ஆளுநர்
    -         முதல்வர் மற்றும் அமைச்சர்கள்.
    -         எம்.எல்.ஏ
    -         உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம்.
    -         தேர்தல் ஆணையம்
    -         யுபிஎஸ்சி தலைவர் மற்றும் உறுப்பினர்.
    -         ஸ்டேட் கமிஷன் தலைவர் மற்றும் உறுப்பினர்.

    அட்டவணை - 3

    Ø     பதவி பிரமாணம் மற்றும் இரகசிய காப்பு பிரமாணம்.


    அட்டவணை 4

    Ø     மாநிலங்களவையில் மாநில பிரதிநிதித்தவம் பற்றியது.

    அட்டவணை 5

    Ø     எஸ்சி, எஸ்டி பகுதிகளை பாதுகாப்பது மற்றும் நிர்வகிப்பது.
    Ø     அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, மிசோரம் மாநிலம் தவிர

    அட்டவணை 6

    Ø     எஸ்டி பகுதிகளை பாதுகாப்பது மற்றும் நிர்வகிப்பது.
    Ø     அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் மட்டும்.


    அட்டவணை 7

    Ø     மத்திய மாநில அரசுகளுக்கு இடையே இருக்கும் அதிகார பகிர்வுப் பற்றியது.

         3 வகைப்பட்டியல்
            
    மத்திய பட்டியல்
     100
    மாநிலப் பட்டியல்
      61
    பொதுப்பட்டியல்
      52

    = மத்திய மற்றும் மாநில பட்டியல்கள் 1935 இந்திய அரசாங்க சட்டத்தின் படி ஏற்படுத்தப்பட்டது.

    = பொதுப்பட்டியல் ஆஸ்திரேலியாவிலிருந்து பெறப்பட்டது.


    அட்டவணை 8

    அலுவலக மொழி
            = முதன் முதலில் 14 அலுவல் மொழிகள் இருந்தன.
            = தற்போது 22 அலுவல் மொழிகள் இருக்கின்றன.
            = நாகலாந்து ஆட்சி மொழி ஆங்கிலம்


    15வது மொழி
    சிந்தி
    21 Amt 1967
    16
    கொங்கனி

    71  -  1992
    17
    மணிப்பூரி
    18
    நேபாளி
    19
    போடோ


    92  - 2003
    20
    டோக்ரி
    21
    சந்தாலி
    22
    மைதிலி


    அட்டவணை 9

    Ø       1951 - முதலாவது திருத்தம் மூலம் இணைக்கப்பட்டது.

    Ø       நீதிமன்ற தலையிட்டில் இருந்து பாதுகாக்க. (30 art)

    Ø       சில சட்டங்களில் நீதிமன்ற தலையீட்டை தடுக்க.            (284 சட்டங்கள்)

    Ø       (எ.கா) 1988 சிறப்பு ஆயுதப்படைச் சட்டம்.(அஸ்ஸாம், மணிப்பூர் கறுப்புச்சட்டம்- இர்னோ சர்மிளா- இரும்பு மங்கை)

    Ø       தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டம் 1994 (69%) (இது 1976 சட்டதிருத்தம் 1994ன் படி இணைக்கப்பட்டது.)

    Ø       1961 தமிழ்நாடு நில உச்சவரம்புச் சட்டம். 15 ஏக்கர் மட்டும்.

    Ø       இந்தியா நில உச்சவரம்புச் சட்டம் 30 ஏக்கர்.


    அட்டவணை 10

    Ø       1985 52, திருத்தம் மு/லம், கட்சி தாவல் தடைச்சட்டம்.

                  1= எம்.எல்.ஏ, எம்.பி பதவி பறிக்கப்படும்.

                  2= கொரடா உத்தரவுக்கு மதிப்பளிக்காத போது   (மசோதாவுக்கு மட்டும்)

                  3= கட்சியிலிருந்து நீக்கப்பட்டால் பதவி பறிக்கப்படமாட்டாது.

                  4= 3ல்1 பங்கு உறுப்பினர்கள் சேர்ந்து போனால் பதவி பறிக்கப்படாது.




    அட்டவணை 11

    பஞ்சாயத்து ராஜ் அல்லது உள்ளாச்சியமைப்பு

    Ø       1993 73ல் பஞ்சாயத்து ராஜ் நிறைவேற்றப்பட்டது.
    Ø       24 4- 1993 தேசிய பஞ்சாயத்து தினம்
    Ø       நவம்பர் 1 தமிழ்நாடு பஞ்சாயத்து தினம்.

    3 அடுக்கு பஞ்சாயத்து ராஜ்

    Ø       1957 - பல்வேந்தரா மேத்தா கமிட்டி அமைக்கப்பட்டது.
    Ø       1959 அறிக்கை சமர்பித்தது.
    Ø       அக்டோபர் 2, 1959. ராஜஸ்தானில் அறிமுகம்.
    Ø       2வது இடம் ஆந்திரா

    கிராம பஞ்சாயத்து
    500 நபர் (ஒரு வார்டு உறுப்பினர்)
    ஊராட்சி ஒன்றியம்
    5,000 நபர் (ஒன்றிய கவுன்சிலர் உறுப்பினர்)
    மாவட்ட ஊராட்சி
    50,000 (மாவட்ட கவுன்சிலர்)




    அட்டவணை 12

    நகராட்சியமைப்பு - 3 அடுக்கு

    பேருராட்சி
    10,000
    நகராட்சி
    1,00,000
    மாநகராட்சி
    10,00,000
            
    1688- சென்னை மாநகராட்சி ஆசியாவில் 2வது பழமையான மாநகராட்சி, இந்தியாவின் முதல் மாநகராட்சி.
    தமிழ்நாட்டின் 2வது மாநகராட்சி மதுரை.



















    பாகம் மொத்தம் 25

    பாகம் 1

    இந்தியாவின் அமைவிடம் மற்றும் நிர்வாகம் பற்றியது. (Art 1 -4 )


    Ø       Art -1   பாரதம் அதன் அமைவிடம் மற்றும் தலைநகரம்.

    Ø       Art -2   புதிய மாநிலம் உருவாக்குதல், இணைத்துக் கொள்ளுதல்.
              (எ.கா) சிக்கிம் இணைத்தல் (1975)
              சட்டத்திருத்தம் மூலம் மட்டுமே இணைக்க முடியும்

    Art -3      மாநிலங்களில் மாற்றங்களை ஏற்படுத்துதல்.
              எல்லையை குறைத்தல், அதிகரித்தல், மாற்றியமைத்தல். நாடாளுமன்றத்தில் சாதரண சட்டத்தைன் மூலம்         நிறைவேற்ற முடியும். (எ.கா) தெலுங்கானா

    Art -4    இந்தியா மற்ற நாடுகளுக்கு நிலத்தை கொடுக்கும் போது    நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும்.


    பாகம் 2

    குடியுரிமை. (Art 5 -11 )

    Ø       Art - 5  பிறப்பின் மூலம் குடியுரிமை

    Ø       Art - 6  பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்தவர்கள்            19 -7-1948 அன்று அல்லது அதற்கு முன்.

    Ø       Art - 7  இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்றவர்கள் மற்றும்          பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்தவர்கள்.            1-3-1947 அன்று அல்லது அதற்குபின் சென்றவர்கள் 19-7-1948க்குள் வந்தவர்கள் இந்திய குடியுரிமை பெற்றவர்.

    Ø       Art - 8  பதிவுசெய்வது மூலம் குடியுரிமை

    Ø       Art - 9  குடியுரிமை துறத்தல் குறித்தது.

    Ø       Art -10  Art 5,6,7,8ன் படி குடியுரிமை தொடர்வர்.

    Ø       Art-11 குடியுரிமை சார்ந்த சட்டங்களை நாடாளுமன்றம்    வகுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.



    குடியுரிமை சட்டம் 1955

    5 வழியில் குடியுரிமை பெறலாம்

                  I.      பிறப்பால்
                II.      மரபுவழி
             III.      பதிவு செய்து கொள்ளல்.
              IV.      இயற்கை ரிதியாக (கலாச்சாரம்- மொழியின் அடிப்படையில்)
                V.      இணைத்துக்கொள்ளல் மூலம்



    3 வழியில் குடியுரிமை துறத்தல்

                                    I.      தாமாக விரும்பி துறத்தல்.
                                  II.      வேறுநாட்டு குடியுரிமை பெற்றால்
                               III.      தேசதுரக குற்றவாளிகள்

    5 முறை திருத்தம் செய்யப்பட்டுள்ளது 1986, 1992, 2003, 2005, 2015

    PIO – PERSON INDO ORGIN 2003
    NRI & PIO – 2015  இணைக்கப்பட்டது.







    பாகம் 3

    அடிப்படை உரிமை .6. (Art 12 -35)

    முதன்முதலில் அடிப்படை உரிமை 7 இருந்தது.
    அமெரிக்காவை பின்பற்றி எழுதப்பட்டது.
     Art-31 மற்றும் Art 19(1)(F) சொத்துரிமை 44 சட்டம் 1978 படி அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு, சாதாரண சட்டம் மூலம் 300A வில் சேர்க்கப்பட்டுள்ளது.

                                    I.      சமத்துவ உரிமை (14-18)
                                  II.      சுதந்திர உரிமை (19-22)
                               III.      சுரண்டலுக்கு எதிரான உரிமை (23-24)
                                IV.      சமய உரிமை (25-28)
                                  V.      கல்வி மற்றும் பண்பாட்டு உரிமை (29-30)
                                VI.      அரசியலமைப்புக்கு உட்பட்டு தீர்வு பெறும் உரிமை (32)        (நீதிப்பேரணை)


    Ø       Art - 12  அரசு மற்றும் அரசாங்கம் என்பதன் பொருள் மற்றும் அதிகாரத்தை கூறுதல்.


    Ø       Art - 13  சட்டம் என்பதன் பொருள். மக்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கும்போது தலையிட்டு தடைசெய்யலாம்.

    Ø       Art - 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம். இங்கிலாந்திலிருந்து பெறப்பட்டது.                       சமமான சூழ்நிலையில் சமமாக பார்க்கும் (அமெரிக்கா). ஆளுனர், குடியரசுத்தலைவர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் தொடர முடியாது. உரிமையியல் வழக்குகள் தொடரலாம் ஆனால்,     60 நாட்களுக்கு முன் தெரிவிக்க வேண்டும் (361 Art same)

    Ø       Art - 15 = பாகுபாடுகளை கலைதல். மதம், மொழி, இனம், பிறப்பிடம் இதன் அடிப்படையில் மற்றொரு இந்திய குடிமகன் பொது இடங்களுக்கு வருவது தடை செய்யக்கூடாது.        (எகா) குளம், டி கடை.

    Ø       Art - 16  பால், மொழி என்ற வேறுபாடு இல்லாமல். அனைவருக்கும் வேலைவாய்ப்பில் சமவுரிமை.

    Ø       Art - 17  தீண்டாமை ஒழிப்பு, (எதிலும் சொல்லவில்லை, விளக்கம் தரவில்லை)

    Ø       1955 தீண்டாமை ஒழிப்புச்சட்டம்

    Ø       1989 - வன்கொடுமை தடுப்புச்சட்டம்

    Ø       Art - 18 பட்டங்களை துறத்தல் (கடைசியாக சர் பட்டம் பெற்றவர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்)               (எகா) நாட்டாமை, ராஜா தோடர்மால், ராஜ்பாதூர், ஜெமீந்தார் போன்ற பெயர்கள் வைக்கக் கூடாது. ஆனால், மில்டரி விருதுகள், அகடாமி விருதுகள், பல்கலைக்கழக விருதுகளின் பெயர்களை வைத்துக் கொள்ளலாம். 
                                                             1954 பத்ம விருதுகள் உருவாக்கப்பட்டது.
    1)       ராஜாஜி, 2) ராதாகிருஷ்ணன் 3) சர்.சி.வி. ராமன்
    45 பேருக்கு வழங்கப்பட்டடுள்ளது.
    Ø       பாரத் ரத்னா, பத்ம விபூசன், பத்ம ஸ்ரீ

    Ø       Art - 19  6 வகை உரிமைகள்

    =  19(1)( a) சுதந்திரமாக பேசும் உரிமை.(கருத்துரிமை) 
    (பத்திரிக்கை சுதந்திரத்தை மறைமுகமாக குறிக்கிறது)

    =  19(1)( b)  ஆயுதமின்றி அமைதியாக கூடும் உரிமை. (166 ஏ)

    =  19(1)( c)  சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளல். (166 ஏ)

    = (2005 சிறப்பு பொருளாதார சட்டத்தின் படி சங்கங்களை அமைக்கக் கூடாது)

    =  19(1)( d)  இந்தியா முழுவதும் சென்றுவர உரிமை

    =  19(1)( e)  எங்கும் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளும் உரிமை

    =  19(1)( f)  நீக்கப்பட்டது

    =  19(1)( g)  எந்த வணிகமும் செய்ய உரிமை.

    Ø       Art - 20   வழக்குகளில் இருந்து பாதுகாப்பு

                                                       I.      குற்றம் நடைப்பெற்றபோது இருந்த சட்டம் மட்டுமே பயன்படுத்த முடியும். குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனை வழங்க கூடாது.
                                                     II.      இரட்டை தண்டனை தவிர்த்தல்.
                                                   III.      தான்செய்த குற்றத்திற்கு தானே சாட்சியாக மாறக்கூடாது.



    Ø       Art - 21   வாழும் உரிமை மற்றும் தனிமனித சுதந்திர பாதுகாப்பு

    சட்டத்தால் நடைமுறை படுத்தப்படும் வழிமுறைகள் இன்றி உயிர் மற்றும் உடைமைகளை பறிக்கக் கூடாது.
    15 வகையான உரிமைகள் உள்ளன.

    (1978 மேனகா காந்தி வெளிநாடு செல்ல உரிமை)

    1950 கோபாலன் எதிர் தமிழ்நாடு வழக்கு


    o        Art – 21 (A) இலவச கட்டாய கல்வி பெற உரிமை உண்டு. (6 முதல் 14 வயது)

    o        86வது திருத்தம் 2003 சட்டம், (2002 மசோதா)

    o        2009 கட்டாய கல்வி உரிமைச்சட்டம்

    o        1-4-2010 நடைமுறைக்கு வந்தது.





    Ø       Art - 22   கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிரான பாதுகாப்பு

                                                                         I.      கைதுக்கான காரணத்தை குறிப்பிட வேண்டும்

                                                                       II.      கைது செய்யப்பட்ட நபர், வழக்கறிஞரை வைத்துக் கொள்ளவும், ஆலோசனை பெற விரும்பினால் அனுமதி அளிக்க வேண்டும்.

                                                                     III.      கைது செய்யப்பட்ட நபர் 24 மணி நேரத்திற்க்குள் அருகில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். (பயண நேரம் பொருந்தாது)

                                                                    IV.      தடுப்புக் காவல் சட்டத்துக்கு பொருந்தாது.

    இந்தியாவில் உள்ள தடுப்புக்காவல் சட்டங்கள்

                   I.      1950 தடுப்புக்காவல் சட்டம்.

                 II.      1969 தடுப்புக்காவல் சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

               III.      1971 மிசா

               IV.      1978 மிசா ரத்து

                 V.      1985 தடா

               VI.      1995 தடா ரத்து

             VII.      2001 பொடா

           VIII.      2002 போடா

              IX.      2004 போடா ரத்து



    இந்தியாவில் தற்போது உள்ள  தடுப்புக்காவல் சட்டங்கள்

                                     I.      1974 COFEPOSA அன்னிய பொருட்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்புச் சட்டம்.

                                   II.      NSA தேசிய பாதுகாப்புச் சட்டம்.



    Art - 23   மனித இழித்தொழில், கட்டாய வேலை, ஊதியமற்ற கட்டாய வேலை இவைகள் கட்டாயம் தடை செய்யப்பட்டுள்ளது.

    Ø       மனித இழித்தொழில்  - மனித வியாபாரம்.

    Ø       கட்டாய வேலை  கொத்தடிமைத் தொழில் (உழைப்பு சுரண்டல்)

    Ø       ஊதியமற்ற வேலை  - பிச்சை எடுத்தல்.

    Ø       Art – 23 (2) அரசு நலன்கருதி கட்டாய வேலை வாங்கலாம்.

    Ø       Art – 24 - குழந்தை தொழிலாளர்களை ஒழித்தல்


    o        14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஆபத்தான வேலையில் ஈடுபடுத்த கூடாது, (சுரண்டலுக்கு எதிரான உரிமை)

    = Art 23, 24 குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பொருந்தும்.



    • Art – 25 - இந்திய குடிமகன் எந்ததொரு மதத்தை பின்பற்றலாம், பரப்பலாம்

    • Art – 26 மதப்பிரிவினர்கள், மதம் சார்ந்த சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை பெற்று உள்ளனர்.

    o         Art – 27 குறிப்பிட்ட மதம் சார்ந்த வளர்ச்சிக்கு வரிவிதிக்க கூடாது. அரசாங்கம் தனது வரிபணத்தை செலவிடக்கூடாது.

    o         Art – 28 அரசு கல்வி நிறுவனங்களில் மதபோதனை முற்றிலும் தடைசெய்யப்பட்டு உள்ளது.

            = அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் மதபோதனை நடத்தலாம். ஆனால், மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது.

           = தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்களை கலந்து கொள்ள வற்புறுத்தலாம்

    • Art – 29 = சிறுபான்மையினர் நலன்களை பாதுகாத்தல்.

    2 வகை

    • மொழி வாரி
    • மதம் வாரி

    • Art – 29(1)  இந்திய குடிமகன் தனக்கென மொழி, தனிப்பட்ட கலாச்சரம் போன்றவை பின்பற்றலாம்.

    • Art – 30 = மொழிவாரி மற்று மதவாரி கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கொள்ள உரிமை. அவ்வாறு ஏற்படுத்தும் போது அரசு கட்டாயம் நிதியுதவி அளிக்க வேண்டும்.

    • Art – 32 = அரசியல் அமைப்புக்கு உட்பட்டு தீர்வு பெறும் உரிமை

    5 வகை

                                     I.      ஆட்கொணர்வு நீதிபேராணை

                                   II.      செயலுறுத்தும் நீதிபேராணை  (மெயின் தேர்வுக்கு 8 மதிப்பெண்)

                                 III.      தடையுறுத்தும் நீதிபேராணை

                                 IV.      நெறிமுறையுணர்த்தும் நீதிபேராணை

                                   V.      தகுதிமுறை வினவும் நீதிபேராணை



    • Art – 33 = ஆயுதப்படை மற்றும் துணை ராணுவப் படைகளுக்கான சிறப்பு உரிமைகள்.

    • Art – 34 = ராணுவ சட்டம் நடைமுறையில் உள்ளபோது ஏற்படும் அடிப்படை உரிமைகள்

    • Art – 35 = அடிப்படை உரிமைகளை மாற்றம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்றம் பெற்றுள்ளது.
     

                                             




No comments:

Post a Comment