Wednesday, 17 February 2016

பிப்ரவரி 2016

பிப்ரவரி 2016


01) இந்திய பதிவாளர் ஜெனெரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்?.


02) அரிசி ஏற்றுமதியில் உலகளவில் இந்தியா பெற்றுள்ள இடம் என்ன ?
                          முதல்

03) ஜனவரி 2016ல் குடியரசு தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்ட இரு மாநிலங்கள் எவை ?

  ஜம்மு & காஷ்மீர் மற்றும் அருணாச்சலபிரதேசம்

04) Competition Commission of India (CCI) அமைப்பின் சேர்மனாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார் ?
                       தேவேந்திரகுமார் சிக்ரி

05) ஜனவரி 2016ல் நடைபெற்ற இந்தியா - பிரான்ஸ் தரைப்படைகளின் கூட்டு பயிற்சியின் பெயர் என்ன ? எங்கு நடைபெற்றது ?
              சக்தி 2016., ராஜஸ்தான்

06) ஓடிஸா மாநிலத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
                    சாம் பிட்ரோடா

07) பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்காக புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அலைபேசி செயலி எது ?
                  MITRA ( Mobile Initiated Tracking and Rescue )

08) அஞ்சல் துறையில் Gramin Dak Seva ஊழியர்களின் பணிக்காலம் மற்றும் ஊதியம் பற்றி ஆராய அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிசன் எது ?
                                    கமலேஷ் சந்திரா

09) இந்தியா இஸ்ரேல் கூட்டு தயாரிப்பில் உருவான LR SAM BARAK - 8 ஏவுகணை எந்த போர்கப்பலில் இருந்து பரிசோதனை செய்யப்பட்டது?
                INS கொல்கத்தா

10) எபோலா நோயிலிருந்து முழுமையா விடுபட்ட மூன்றாவது நாடாக எந்த நாட்டை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது ?
      கினியா ....... ( 01 - லைபீரியா., 02 - சியாரா லியோனே )

11) 2015ம் ஆண்டுக்கான ஞானபீட விருது பெற்றவர் யார் ?
                        குஜராத்தை சேர்ந்த ரகுவீர் சௌத்ரி

12) நிதிஆயோக் தலைமை செயல் அலுவலராக ( CEO ) நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார் ?
                           அமிதாப் காந்த் IAS

13) தங்கள் நாட்டின் பகுதியில் இந்திய கடற்படைக்கான தளம் அமைத்துகொள்ள அனுமதி வழங்கியுள்ள நாடு எது ?
                    சீஷெல்ஸ்

14) நல்லெண்ண அடிப்படையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியா கட்டி வரும் நீர்த்தேக்கத்தின் பெயர் என்ன ?
                                சல்மா அணை
15) விவசாயிகள் நன்மைக்காக மத்திய விவசாயத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இரண்டு அலைபேசி செயலிகள் ( app) எவை ?
                           Crop Insurance & Agri Market

16) அமெரிக்காவின் தேசிய அறிவியல் விருது - 2015 பெற்றவர் யார் ?
                              ராகேஷ் குமார் ஜெயின்

 17) ஐ.நா. அமைப்பு, சுனாமி விழிப்புணர்வு நாளாக எந்த நாளை அறிவித்துள்ளது?
                          நவம்பர் - 05
 18) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் 2015ம் ஆண்டின் சிறந்த வீரர் விருது பெற்றவர் யார் ?
                 ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித்
 19) சமீபத்தில் வடஇந்தியாவின் முதல் கம்பி இழை பாலம் ( cable-stayed bridge )
a) எந்த மாநிலத்தில் / எந்த நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது ?
b) அந்த பாலத்திற்கு சூட்டப்பட்டுள்ள பெயர் என்ன ?
c) எந்த நதியின் மேல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது?

19) a) ஜம்மு & காஷ்மீர் மாநிலம், Basoli நகர்
b) Atal Setu
c) ராவி நதி ( Ravi river )


இந்தியாவில் ஈர்ப்பு அலைகளை பதிவு செய்வதற்கான லிகோ ஆய்வுக் கூடம்  ( LIGO -- Laser Interferometer Gravitational Wave Observatory ) அமைக்கும் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


01) சரக்கு மற்றும் சேவை வரி (GST) மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு உருவாக்கியுள்ள மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய அதிகாரக்குழுவின் தலைவராக மேற்குவங்க நிதியமைச்சர் அமித் மித்ராவை மத்திய அரசு நியமித்துள்ளது.
இதற்கு முன் இப்பதவியில் இருந்த கேரளா நிதியமைச்சர் K.M. மாணி ராஜினாமா செய்துவிட்டார்.
.
02) அமெரிக்கா, அறிவியல் துறையில் சாதிப்பவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இளம் விஞ்ஞானிகளை கவுரவித்து வருகிறது.
இந்தாண்டு 106 விஞ்ஞானிகளுக்கு பிரசிடென்சியல் ஏர்லி கேரியர் அவார்ட்ஸ் பார் ரிசர்சர்ஸ் மற்றும் இஞ்ஜினியர்ஸ் ( Presidential Early Career Awards for Scientists and Engineers) வழங்கப்பட உள்ளது.
இதில் 6 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர். பர்டியூ பல்கலை பேராசிரியர் மிலிந்த் குலகர்னி, ஹார்வார்டு பல்கலை., உதவி பேராசிரியர் கிரன் முசுனூரு, வாண்டர்பில்ட் பல்கலை., உதவி பேராசிரியர் சச்சின் படேல், நாசா ஆராய்ச்சிமைய விஞ்ஞானி விக்ரம் ஷியாம், பென்சில்வேனியா பல்கலை., பேராசிரியர் ராகுல் மங்காராம், வாஷிங்டன் பல்கலை., தொழில் முனைவு பேராசிரியர் ஸ்வேதக் படேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
.
03) அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து புதிய முதல்வராக கலிகோ புல் பதவியேற்றுள்ளார்.
.
04) ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டு குழுவின் தலைவராக, பா.ஜ,வின் H.ராஜா நியமிக்கப்பட்டு உள்ளார்.
.
05) மத்திய அரசின் தூர்தர்ஷன், 'டிவி' சேனல், அகில இந்திய வானொலி போன்றவை, பிரசார் பாரதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன;
பிரசார் பாரதி வாரியத்தின் தலைவராக சூர்ய பிரகாஷ் உள்ளார்.இந்த வாரியத்தில், பகுதி நேர உறுப்பினர்களாக, ஆறு பேர் செயல்படலாம். அதில், இரண்டு உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்தன. அந்தப் பதவிகளுக்கு, பிரபல இந்தி நடிகை கஜோலும், ஆன்லைன் மீடியா நிறுவனத்தை சேர்ந்த  ஷசி சேகர் வேம்பட்டி என்பவரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.




01) தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) புதிய தலைவராக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்துவை நியமிக்க குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
.
02) உலக அளவில் வாழ்வதற்கு உகந்த இடங்களின் பட்டியலை பல்வேறு துறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமான மெர்ஜர் வெளியிட்டுள்ளது.
உலக அளவில் வாழ்வதற்கு உகந்த இடங்களில், வியன்னா (ஆஸ்திரியா) முதலிடத்தில் உள்ளது. ஜூரிச் (ஸ்விட்சர்லாந்து), ஆக்லாந்து (நியூசிலாந்து), மூனிச் (ஜெர்மனி), வான்கோவர் (கனடா) ஆகிய நகரங்கள் முறையே 2 முதல் 5ஆவது இடங்களைப் பிடித்துள்ளன.
லண்டன் 39ஆவது இடத்தையும், பாரீஸ் 37ஆவது இடத்தையும், நியூயார்க் 44ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.
இந்தியாவில் ஹைதராபாத் நகரம் முதலாவதாக இருக்கிறது. அந்நகரம் உலக அளவில் 139ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அதற்கடுத்து, புணே (144), பெங்களூரு (145), சென்னை (150), மும்பை (152), கொல்கத்தா (160) ஆகிய நகரங்கள் உள்ளன.
ஆசியக் கண்டத்தில், சிங்கப்பூர்தான் முதலாவதாக இருக்கிறது. உலக அளவில் சிங்கப்பூர் 26ஆவது இடம்பெற்றுள்ளது.
.
03) 2016-ஆம் ஆண்டுக்கான பிரிட்டனின் Business Super Brandஆக இந்திய நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் (TCS) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.




35th COBRA GOLD - 2016
----------------------------------
.
தாய்லாந்தில் பிப்ரவரி 09 முதல் 19 வரை நடைபெற்ற 35வது கோப்ரா கோல்டு - 2016 என்னும் பேரிடர் கால மீட்பு ஒத்திகையில் முதன் முறையாக இந்திய ராணுவம் கலந்து கொண்டுள்ளது.
இந்த ஒத்திகையில் இந்தோனேசியா, அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
COBRA GOLD பயிற்சி 1982 முதல் நடைபெற்று வருகிறது.



No comments:

Post a Comment