திருச்சி பொது விவரம்
உச்சி பிள்ளையார் கோயில்
-
272 அடி உயரம்
-
344 படிக்கட்டுகள்
-
தாயுமானவர் கோயில் உள்ளது.
- மலைக்கோட்டை நகரம் -
திருச்சி
மணப்பாறை
வீரப்பூர்
பெரியகாண்டியம்மன் கோயிலும், பொன்னர், சங்கர் ஆலயமும் பிரசித்தி பெற்றவை. மாசி
மாத்தில் நடைபெறும் திருவிழாவுக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வருவது
சிறப்பு. மணப்பாறை மாட்டு சந்தை புகழ்பெற்றது. இந்த ஊர் முறுக்கு தனிச்சுவை உண்டு.
திருவெறும்பூர்
எறும்பீஸ்வரர் ஆலயம் பழம்பெறுமை வாய்ந்தது. பிரம்மனே இக்கோயிலுக்கு
வந்து சுவாமியை வழிபட்ட வரலாற்றைக் கொண்டது.
மத்திய அரசின் பெல் நிறுவனமும், படைக்கலன்
மற்றும் துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அமைந்தள்ளன.
தேசிய தொழில்நுட்ப
கல்லூரியான என்.ஐ.டி, மற்றும் அரசு பொறியியல் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
அண்ணா பல்கலைக்கழக கிளை மற்றும் கி.ஆ,பெ.விஸ்வநாதன் மருத்துவக்கல்லூரி, அரசு
பிசியோதெரபி கல்லூரிகள், அரசு சட்டக்கல்லூரி, வேளாண்மை பொறியியல் கல்லூரி,
பாரதிதாசன் மேலாண்மை கல்லூரி ஆகியன உள்ளன.
முசிறி
காவிரி கரையோரமாக உள்ள முசிறி முற்காலத்தில் முசுகுந்தன் என்ற
மன்னன் இப்பகுதியை ஆட்சி செய்ததால் முசுகுந்தபுரி- ஆக இருந்தது, தற்போது முசிறி
எனப் பெயர் மருவியுள்ளது.
தா.பேட்டை காசிவிஸ்வநாதர்,
ரேவதி நட்சத்திர ஸ்தலமான காருகுடி கைலாசநாதர் கோயில்கள் உள்ளன.
வாழை, வெற்றிலை விவசாயம் அதிகமாக உள்ளது.
No comments:
Post a Comment