Saturday, 13 February 2016

துறையூர்



துறையூர்



     திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் முன்பு மாலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட உப்பிலியபுரம் தொகுதியாக இருந்து, தற்போது தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியாக மாறியுள்ளது. சமதளப் பரப்பையும், மலைப்பகுதிகளையும் கொண்டுள்ள இங்கு, தென் திருப்பதி என்றழைக்கப்படும் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலும், நந்திகேஸ்வரர் ஆலயமும் பிரசித்து பெற்றவை.

     விவசாயமே முக்கியத் தொழில். நெல், வெங்காயம், மரவள்ளி அதிகளவில் நடைபெற்று வருகிறது.

     இங்குள்ள பச்சமலை மற்றும் புளியஞ்சோலை சுற்றுலா தலங்கள், பயணிகளை வெகுவாகக் கவரும் அம்சங்களில் ஒன்று.

     துறையூர் தொகுதியில் ஆதி திராவிடர், ரெட்டியார், உடையார், அகமுடையார், நாயக்கர் உள்ளிட்ட சமு‘கத்தினர் பெருமளவில் வசித்து வருகின்றனர்.

     மொத்த வாக்காளர்களில் எண்ணிக்கை 2,10,511.      ஆண்கள் - 1,02,648. பெண்கள் - 1,07,863

சட்டமன்ற உறுப்பினர் - டி. இந்திராகாந்தி (அதிமுக)





பிரச்னைகள்

-        அரசு மருத்துவமனையில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாகியுள்ளது. போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாதது.

-        அரசுக் கல்லூரி இல்லை.

-        பேருந்து நிலையம் மேம்படுத்த வேண்டும்.

-        பச்சமலை பகுதியில் மரவள்ளி கிழங்குக்கு உரிய விலைகிடைக்கவில்லை.

-        உப்பிலியபுரம் பகுதியில் சீரகசம்பா அரிசிக்கு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

-        காணப்பாடி பகுதியில் ஆற்றுப்பாலம் தேவை.

-        நாகலாபுரம், வேங்கடத்தானூர், செங்காட்டுப்பட்டி போன்ற பகுதியில் விளையும் வெங்காயத்திற்கு குளிர்பதனக் கிடங்கு தேவை.

-        தொழிற்சாலைகள் ஏதுமில்லை.

No comments:

Post a Comment